மதுரை விமான நிலையம்.. ஏப்ரல் 1 முதல் "24*7"..  சு. வெங்கடேசன் நன்றி!

Jan 13, 2023,11:10 AM IST
மதுரை: மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று மத்திய இந்திய விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் சென்னை,  திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில்  உள்ள விமான நிலையங்கள் வர்த்தக ரீதியாக முக்கியமானவையாக திகழ்கின்றன.  இதில் சென்னை, திருச்சி,  கோவை விமான நிலையங்கள் 24 நேரமும் இயங்கி வருபவையாகும்.  ஆனால் மதுரை விமான நிலையம் பகல் நேரத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.

ஆனால் சமீப காலமாக மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவிலான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எனவே இரவு நேர விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மட்டுமல்லாமல், அகர்தலா, இம்பால், போபால்,  சூரத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புதியஅறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்