"ஆட்டோவுக்குள் கம்மி விலையில் ஏர்கூலர்".. மதுரைன்னா சும்மாவாய்யா.. இது "செல்லூர் ராஜு மண்"ணுய்யா..!

Feb 06, 2024,06:36 PM IST

மதுரை: மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரத்னவேல் என்பவர் குறைந்த செலவில் தனது ஆட்டோவில் ஏர் கூலர் வசதியை ஏற்படுத்தி அசத்தியுள்ளார்.


மத்த ஊரில் எல்லாம் ஒரு மாதிரி வெயில் அடிச்சா.. இந்த மதுரையில மட்டும் வேற லெவலில் இருக்கும்.. வெள்ளை வெளேர்னு அடிக்கும் அந்த வெயிலையும் தாங்கிக்கிட்டு நம்மாளுங்க அவங்க பாட்டுக்கு போய்ட்டே இருப்பாங்க. அப்படி வெயில் அடிக்கும். 


வீட்டுக்குள்ளேயே இருக்கலாம்னா அதுவும் முடியாது.. வெந்து தணிந்தது காடு.. வீட்டுக்குள்ள எல்லா ரூமுலயும் ஏசியைப் போடுன்னு புலம்ப வச்சுரும்.. வெளியில் போனா ஆத்தாடி.. மண்டை காஞ்சு கருவாடாய்ப் போய்ரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில ஆட்டோ டிரைவர் ஒருவர் சூப்பரா சிந்திச்சு.. சுப்ரீமா யோசிச்சு.. அசர வைக்கும் ஒரு வேலையைச் செஞ்சிருக்கார் மக்களே.




வெயில் காலத்தில் வரும் வெப்ப காற்றை தவிர்க்க குறைந்த செலவில் ஆட்டோவில் ஏர் கூலர் அமைத்து அசத்தியுள்ளார், மதுரையைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுனர் ரத்தினவேல் பாண்டியன். இது குறித்து அவர் பேசுகையில், என்னுடைய பெயர் ரத்தினவேல் பாண்டியன். நான் ஓரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். சண்டே ஒரு நாள் மட்டும் தான் ஆட்டோ ஓட்டுவேன். வாரத்தின் 6 நாட்கள் ஆபீசில் உட்காந்து இருந்து விட்டு வந்து ஒரு நாள் மட்டும் ஆட்டோ ஓட்டுவேன். 


அப்போது எனக்கு வெயிலின் தாக்கம் அதிகமா இருந்தது. மற்ற ஆட்டோகாரர்கள் எல்லாம் வெயில் தாங்க முடியாமல் ஆட்டோவில் அட்டை வைத்து கட்டியிருப்பார்கள். அதை பார்த்த பிறகு தான் இதை ரெடி பண்ணினேன். நான் முதலில் சின்ன பைப் வைத்து ஏர் கூலர் ரெடி பண்ணியிருந்தேன். அதுல காத்து சரியா வரல. அதுக்கப்புறமா கொஞ்சம் பெரிய பைப் வைத்து ஏர் கூலர் ரெடி பண்ணினேன். 


முதலில் லேசாக தான் காத்து வந்தது. பின்னர் வேகமா போக போக காத்து நல்ல வந்துச்சு. சரி அப்படினு நானும் சந்தேஷமா வண்டி ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். எதிர் காலத்துல வண்டியில பயணம் செய்பவர்களுக்கும் இதே மாதிரி ஏர் கூலர் ரெடி பண்ணனும்னு ஆசை இருக்கு. இதற்கு மொத்த செலவே ரூ.400தான் ஆச்சு. கம்மி விலையில் இதை ரெடி பண்ணியதால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 


நா ஆட்டோ ஓட்டனும்னு ஓட்டல. எங்க வீட்டுல அப்பா, தம்பிக  எல்லோருமே போலீஸ்காரங்க. எல்லாருமே காக்கி சட்ட போட்டவங்க, நானும் காக்கி சட்டை போடனும்னு ஆசைப்பட்டேன். அப்ப எங்கம்மா கொடுத்த ஐடியா தான் இந்த காக்கி சட்ட. எல்லாம் காக்கிதானே.. இப்ப நானும் காக்கி சட்டை போட்டுட்டேன். வருமானத்துக்கு ஒரு வழியும் கிடைத்திருச்சு.. என்று கூறி புன்னகைக்கிறார்.


மதுரைன்னா சும்மாவாய்யா.. இது "செல்லூர் ராஜு மண்"ணுய்யா.. விடுவோமா நாங்க.. விஞ்ஞானத்தை விரல் இடுக்குல வச்சிருப்போம்ல.. சபாஷ்ண்ணே ரத்தினவேல் பாண்டியண்ணே.. அசத்துங்க!

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்