மதுரை: தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள், இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள் நடுவதால் மோதல்கள் உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
அதிலும் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரத்தில் கொடிக் கம்பங்களை அமைக்கின்றன. பெரும் மழை, காற்று காலத்தில் இவை கீழே விழுந்து பல விபரீதங்கள் நேரிட்டுள்ளன. இப்படித்தான் சாலைகளின் நடுவே பெரிய சைஸ் பேனர்கள், தட்டிகளை வைத்தும் மக்களை கஷ்டப்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று மக்கள் புலம்பிக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலான ஒரு உத்தரவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்துள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்றி விட்டு அதிக உயரத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து கட்சி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் அதிரடியான சில உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது. அதன்படி கூறப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள்,இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.
- பட்டா உள்ள இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.
- வருங்காலங்களில் தேசிய மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}