மதுரை: மதுரை - கொழும்பு இடையிலான விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் அக்டோபர் 29ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து கொழும்பிற்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை மதுரையிலிருந்து கொழும்புவிற்கு வாரம் ஐந்து நாட்களுக்கு விமான சேவை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

தற்போது செவ்வாய் மற்றும் வியாழக் கிழமையை தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் மதுரை டூ இலங்கை இடையே ஏற்கனவே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்க நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வரும் விமான சேவை தற்போது மேலும் ஒரு நாள் அதிகரித்து ஆறு நாட்கள் இயக்க ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து வாரத்திற்கு ஆறு நாட்கள் மதுரை டூ இலங்கை இடையே விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்களும் மதுரை டூ ஸ்ரீலங்கா இடையே விமான சேவை அக்டோபர் 29 முதல் இயக்கப்படுவதாக அதிகார அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
நெற்றிக்கண் திறப்பினும்....!
வசந்த பஞ்சமி 2026.. சரஸ்வதி தேவியை வழிபடுவோம்.. ஞானம் பெறுவோம்
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
பெண்ணே நிமிர்ந்து பார்!
{{comments.comment}}