மதுரை மக்களே.. ஹேப்பி நியூஸ்.. பெரியார் பஸ் ஸ்டாண்ட்.. ஷாப்பிங் காமப்ளக்ஸில் தியேட்டர் வருதாம்!

May 15, 2024,05:43 PM IST

மதுரை:  மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் நவீன முறையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மதுரை மாநகராட்சி தமிழக அரசிடம் ஒப்புதல் மனு அளித்துள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை, புதிய பிரமாண்ட பேருந்து நிலையமாக மாற்றி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி  153 கோடி செலவில் பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது புதிய பெரியார் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மறுபக்கம் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இந்த வணிக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 119 கோடி செலவில், 474 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த வணிக வளாகம் திறந்த பின்பு இங்கு உள்ள  கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், பணிபுரியும் வேலை ஆட்கள் போன்றோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு மிகப்பெரிய பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.




பெரியார் பேருந்து நிலையம் மதுரை மாநகரின் மத்தியில் உள்ளது. இதனை சுற்றி பல முக்கிய இடங்கள் உள்ளன. குறிப்பாக, மீனாட்சி அம்மன் கோவில், ரயில்வே ஜங்ஷன், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் போன்ற மதுரையின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இதனைக் காண ஏராளமான வெளியூர் மக்களும், உள்ளூர் மக்களும் வந்து செல்வதற்கு ஏதுவாக பெரியார் பேருந்து நிலையம் பயன்பட்டு வருகிறது. 


பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பெரியார் பேருந்து நிலைய வளாகத்திலேயே மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்த தற்போது மதுரை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. 


அதன்படி, பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தியேட்டர்களை மேல் தளத்தில் கட்ட அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளது. மேலும் மக்கள் மேல் தளங்களில் ஏறி செல்வதற்கு ஏதுவாக எஸ்கலேட்டர் அமைக்கவும்  மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான புதிய பிளான் தயாரித்து தமிழக அரசிடம் அனுப்பி வைத்துள்ளது. இது வரும்போது கிட்டத்தட்ட பிரமாண்ட மால் போல இந்த வணிக வளாகம் செயல்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.. பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோமா, ஜில் ஜில் ஜிகர்தண்டா குடிச்சோமா.. அப்படியே படத்தைப் பார்த்தோமான்னு மக்கள் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்க ஏதுவாக இது அமையும்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்