மதுரை: "ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல; அது ஒரு வீர விளையாட்டு. இது ஒன்றும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை அந்தந்த கிராம நிர்வாகக்குழுவினரே நடத்த வேண்டும் என்ற முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சில தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் ஜல்லிக்கட்டை நடத்திய போது பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனால், இந்தாண்டு மேற்கண்ட மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசின் வருவாய் துறையே முன்னின்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சுமூகமாகவும், பாதுகாப்புடனும் நடத்துவதற்கு அனைத்துச் சமுதாயப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் அறிவுரை குழுவை (Advisory Committee) அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எவ்வித பாரபட்சமுமின்றி இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தின் அடையாளம். பல போராட்டங்களுக்குப் பிறகு இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதால், அதன் புனிதம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது. வணிக ரீதியான போட்டிகளைப் போல இதைக் கருதாமல், பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
விஜய்யின் ஜனநாயகன் படம் அவரது அரசியலுக்கு உதவுமா? மக்கள் ஆதரவை பெருக்குமா?
{{comments.comment}}