மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் , மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் இவ்வீர விளையாட்டு மிகவும் சிறப்புடையதாகும். பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் இவ்விளையாட்டு உலக பிரசித்தி பெற்றதாகும்.
குறிப்பாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகப் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டம் நடந்து தற்போது உச்சநீதிமன்றமே இந்தப் போட்டி கலாச்சாரம் தொடர்புடையது என்று கூறி தடைகளை தகர்த்து உத்தரவிட்டு விட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு இருந்து வந்த அத்தனை சிக்கல்களும் நீங்கி விட்டன.

ஜல்லிகட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும். இப்போட்டியினை காண வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால் பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தனர். ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே இனி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}