மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Jun 19, 2024,01:36 PM IST

மதுரை:  மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் பொது நவ வழக்கு தாக்கல் செய்துள்ளார். குத்தகை காலம் முடிவைடவதற்கு முன்பாகவே வெளியேற சொல்வதாக மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில், பொதுநல வழக்கு பதிவு செய்திருந்தார்.  அதில், இரண்டு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி  நிறைவடைகிறது. குத்தகை காலம் நிறைவடைந்த பின்னர் அதனை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் இந்த நிலம் அரசிடம் வழங்கப்படுகிறது.




ஆனால் குத்தகை காலம்  முடிவதற்கு முன்பாகவே அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து இருக்கிற பாம்பே பர்மா டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் தேயிலை தோட்டத்தில்  பணி புரிந்தவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.  மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு முன்பாக தொழிலாளர் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


குத்தகை காலம் முடிவதற்கு முன்கூட்டியே தொழிலாளர்களை  வெளியே அனுப்புவதால், தாமாக முன்வந்து ஓய்வு பெறும் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 1.4 லட்சம் முதல் 2.8 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. ஆனால் 60 வயது எட்டியவர்களுக்கு எவ்விதமான தொகையும் வழங்கப்படுவதில்லை. இந்த தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது. சொந்த இடமோ, வீடோ இல்லாத நிலையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், பெரும்பாலானவர்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பவர்கள், அதுமட்டும் இன்றி  நான்கைந்து தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில் தற்போது அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் செய்வதறியாது தவிர்த்து வருகிறார்கள்.


ஆகவே அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வு உதவிகளை அரசு செய்ய வேண்டும். நத்தம் பகுதி நிலங்களில் அவர்களுக்கு  இலவச மனை பட்டா வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர முன்வர வேண்டும்.  ஆகஸ்ட் மாதம் முதல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையில் அவர்களுக்கு கன்னியாகுமரியில் உள்ள ரப்பர் தோட்டம் மற்றும் களக்காடு ரப்பர் தோட்டத்தில் பணி வழங்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு மாதம் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.


இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் பொறுப்பு நீதிபதிகள் முன்னர் விசாரணைக்கு வந்தது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் நாளை மறுநாள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்