மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவில் பிரசாதங்களில் கலப்படம் என்ற செய்தி மக்களை உலுக்கி வருகிறது. குறிப்பாக சாமி நம்பிக்கை உள்ளவர்களை அது கவலைக்குரியதாக்கியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது. அதே திருப்பதி கோவில் லட்டில் குத்கா பாக்கெட் கிடந்ததும் சமீபத்தில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமாக உள்ளது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் 2019ம் ஆண்டு முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வடை, அப்பம் உள்ளிட்டவைகளும் பிரசாதமாக விற்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு கோவில் பிரசாதங்கள் குறித்தும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். பிரசாதம் தயாரிக்கும் உணவுக்கூடத்தை இவர் நேரடியாக ஆய்வு செய்தாா். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளோம். லட்டு உள்பட அனைத்தும் சுத்தமாகவும் தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}