மதுரை: கல்குவாரியில் நடந்த வெடிவிபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் அருகே ஆர்எஸ்ஆர் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள பாறைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக வெடி பொருட்கள் இறக்கப்பட்டது. அந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வெடி பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி இறந்தனர்.

இந்நிலையில், இக்கல்குவாரியின் பங்குதாரரான ஆவியூரை சேர்ந்த சேது என்பவர் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கல்குவாரியின் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெடி விபத்தில் உயரிழந்த 3 பேரின் குடும்பத்தினர்களுக்கு கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவராணமாக வழங்கப்பட்டது. இதில் 50,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ள 11.5 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.
வெடி விபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}