மதுரை: வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி சேலம், ஈரோடு மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 10ம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் வணிகர்கள் இன்று கடையடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜி.எஸ்.டியால் சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்துக்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த தீர்மானத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உணவுப்பொரும் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி, இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}