மதுரை: எதை எடுத்தாலும் இந்த மதுரைக்காரங்க மட்டும் துண்டாத் தெரிவாங்க.. அப்படின்னு சொல்வாங்க.. அதை மறுபடியும் நிரூபிச்சு ஊர்ப் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்கள் மதுரை விஜய் ரசிகர்கள். நேற்று இரவுதான் கட்சியின் செயலி வெளியானது. அதே வேகத்தில் அதையே போஸ்டராக அடுத்து மதுரை முழுக்க ஒட்டி அதகளப்படுத்தி விட்டனர் ரசிகர்கள்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.. வேற லெவலில் இருக்கிறது. வழக்கமான கட்சி நடவடிக்கைகளை இங்கு காணோம். அதற்கு மாறாக நிறுத்தி நிதானமாக அதேசமயம் நடக்கும் ஒன்றும் அதிரிபுதிரியாக அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
வழக்கமாக எல்லோரும் பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சி தொடங்குவார்கள், கட்சிப் பெயரை அறிவிப்பார்கள்.. களேபரப்படுத்துவார்கள்.. கொஞ்ச காலத்திற்குப் பிறகு காணாமல் போய் விடுவார்கள். ஆனால் விஜய் அப்படி கட்சி ஆரம்பிக்கவில்லை. சத்தம் போடாமல் ஒரு அறிக்கை மூலம் தனது கட்சிப் பெயரை அறிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.
"நண்பா நம்ம டார்கெட் 2026தான்.. அதுக்குள்ள நான் போய் என் வேலையை முடிச்சுட்டு வந்துர்றேன்.. நீங்க ரெடியா இருங்க" என்று கூறி விட்டார் விஜய். அதன் பிறகு படிப்படியாக நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இடையில் கட்சிப் பெயரில் ஒரு "க்" விட்டுப் போயிருச்சு தலைவா என்று பலர் சுட்டிக் காட்டவே, அதையும் சரி செய்து, இப்ப ஓகேவா என்று கேட்டு வியப்பில் ஆழ்த்தினார். வழக்கமாக இதுபோன்ற "reciprocal" சமாச்சாரம் எல்லாம் அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. இது விஜய்யிடம் இருப்பதே பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர் சேர்க்கையை கையில் எடுத்துள்ளார் விஜய். 2 கோடி பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது விஜய்யின் டார்கெட். இதைக் கேட்டதும் பலரும் சிரித்தார்கள். அதெப்படிங்க 2 கோடி பேரை கட்சி உறுப்பினர்களாக்க முடியும்னு விஜய் நினைக்கிறார்னு பலரும் கேட்டார்கள். ஆனால் நேற்று நடந்த கூத்தைப் பார்த்து பலரும் அதிர்ந்து போய் நிற்கிறார்கள்.. ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சி உறுப்பினர்களாக குவிந்ததால் மொத்த அரசியல் உலகமும் "ஆத்தாடி.. இது வேற லெவல் ஆட்டமா இருக்கே" என்று ஜெர்க் ஆகியுள்ளனராம்.
அதை விட முக்கியம்.. கட்சி உறுப்பினர் சேர்க்கையை இப்படி செயலி மூலம் மேற்கொண்ட முதல் கட்சி என்ற பெயரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. இதைத்தான் மதுரை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடியுள்ளனர். ராத்திரி 7 மணி வாக்கில் விஜய் ஆப்பை வெளியிட்டார். நான் உறுப்பினராகிட்டேன் நண்பா.. நீங்களும் ஈசியா மெம்பர் ஆகலாம் என்று செயலியை அறிமுகப்படுத்திப் பேசியிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் மதுரை சுவர்களை ஒரு போஸ்டர் நிரப்பி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
விஜய் வெளியிட்ட செயலியின் QR கோடுடன் கூடிய போஸ்டர்தான் அது. என்னய்யா இது.. விஜய்யே இப்பத்தான் அறிவிச்சாரு.. அதுக்குள்ள இந்தப் பசங்க போஸ்டரே அடிச்சுட்டாங்களே என்று பலரும் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டனர்.
"இவிங்க அரசியல் கொஞ்சம் மார்க்கமாத்தான் இருக்கு".. என்று "பாரம்பரிய கட்சிகள்" கசமுசாவென கடுப்பாகிக் கொண்டிருக்கின்றனவாம்.. பார்க்கலாம்.. இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதுன்னு... போற போக்கைப் பார்த்தா வடிவேலுவை கட்சியில் சேர்த்து மதுரை எம்.பி ஆக்கினாலும் ஆக்கிருவாங்க போல!!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}