நெல்லை: நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே உள்ள முத்தூர் கிராம சாலையில் இன்று இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த இசை கச்சேரி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

நெல்லையில் முதல் முறையாக இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதால் இதுவரை 10,000 ரசிகர்கள் பங்கு பெற முன் அனுமதி சீட்டை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் இளையராஜாவைக் காண திரளான ரசிகர்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இளையராஜா பங்குபெறும் இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சி திருநெல்வேலியில் குறுகலான பாதையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகலான பாதை வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சிக்காக நெல்லை வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு சிறந்த மரியாதை அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}