சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இனி ரூ. 2000 ஆக உயர்த்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதனால், 15 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
- இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மின்சார மீட்டர் பொருத்தப்படாமல், நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

- 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருமான வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும். காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
- புதுப்பெண், தமிழப் புதல்வன் திட்டங்களின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையானது, ரூ. 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- நெல் கொள்முதல் விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ. 3500 ஆக உயர்த்தப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4500 வழங்கப்படும்.
- பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்படும்.
- முதியோர் உதவித் கொலை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 2500 உயர்வு.
- மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 12,000 உயர்வு, மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 9000 ஆக உயர்வு.
- சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
- மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
- சுய உதவிக் குழு பெண்கள் பிணை ஏதுமின்றி ரூ. 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் உதவி.
- திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்.
- 5 ஆண்டுகளில் 10000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
- தொழிற்சாலைகளுக்குச் செல்லும் மகளிருக்கு வசதியாக, 1000 குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் 10 கைத்தறிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டின் ஏற்றுமதியை 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை
- தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள்
- 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினிகள் வழங்கப்படும்
- அரசு அமைப்புகளில் ஏற்படும் ஒன்றரை லட்சம் காலி பணியிடங்கள் காலதாமதம் இன்றி நிரப்பப்படும்
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்
- ஒரு லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடம் நிரப்பப்படும்
- எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும்
- தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
- ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்பு
- அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்படும்
- நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1500 மாத உதவித் தொகையுடன் பயிற்சி
- சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்
- கிராம சாலைகள் ரூ.10,000 கோடியில் சீர் செய்யப்படும்
- 5,000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்
- 1,000 கிராம கோவில்கள் மறுசீரமைக்கப்படும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}