சென்னை: காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிக்கும் மகாகவிக்கும். உள்ள வேறுபாட்டினை தெரிவித்து பாரதியாரின் நினைவு நாளான இன்று பாரதியாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
பாரதியார் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்து, 1921 செப்டம்பர் 11ம் தேதி இறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் கவிதை மற்றும் உரைநடை எழுதுவதில் தனித்திறமை பெற்றவர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
நவீன தமிழ் கவிஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவருக்கு மகாகவி என்ற புனைபெயரும் உண்டு. பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக போரடியவர். இவரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளில் இன்றைய கால கவிஞர் வைரமுத்து கவி அஞ்சலி செலுத்தும் விதமாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:

கவிக்கும் மகாகவிக்கும்
என்ன வேறுபாடு?
காலத்தால் உருவாக்கப்பட்டவன்
கவி;
காலத்தை உருவாக்கியவன்
மகாகவி
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக
இந்திய விடுதலைக்கு ஆதரவாக
ஒரு ஜனநாயகக் காலத்தை -
பண்டித மொழிக்கு எதிராக
பாமர மொழிக்கு ஆதரவாக
ஓர் இலக்கியக் காலத்தை -
உருவாக்கியதில்
பாரதி ஒரு மகாகவி
எரிக்கப்படுகிற வரைக்கும்
வாழ்வில் அப்படி
வறுமைப்பட்டவனும்
எரித்து முடித்தபிறகு
வாழ்வில் அப்படிப்
பெருமைப்பட்டவனும்
அவனைப்போல்
இன்னொருவர் இல்லை
இன்று அவன்
உடல் மறைந்த நாள்
அவன்
நீங்கா நினைவுக்கும்
தூங்காப் புகழுக்கும்
தமிழ் அஞ்சலி என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
பூங்கோதையின் கணக்கு!
அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை.. ராமலிங்க அடிகளார் வள்ளலாராக மாறிய கதை!
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தாறுமாறாக ஏறி வரும் தங்கம் விலை.. எப்படிச் சமாளிப்பது.. நகைக்கான மாற்று வழிதான் என்ன?
தீண்டாமையை ஒழிப்போம்.. சம தர்ம சமத்துவத்திற்கான உறுதிமொழி ஏற்போம்!
{{comments.comment}}