டெல்லி: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியினால் விமான டிக்கெட் விலை எகிறி வருகிறது. 600 சதவீதம் அளவிற்கு டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளன விமான நிறுவனங்கள்.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி துவங்கி இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. கிட்டதட்ட 45 நாட்கள் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் லட்சக்கணக்கானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு குவிந்து வருகின்றனர். கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 11.47 கோடி பேர் பங்கேற்றியுள்ளனர். டெல்லி, மும்பை,பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருவதால், விமான கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்த விமான தேவையை பூர்த்தி செய்வதற்காக டிஜிசிஏ விமான போக்குவரத்து இந்த ஜனவரியில் மட்டும் 81 கூடுதல் விமானங்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி - பிரயாக்ராஜ் இடையேயான விமானங்களுக்கான விமான கட்டணம்21 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
டெல்லி- வாரணாசி இடையிலான ஒருவழி டிக்கெட்டுகளின் விலை 20,000 முதல் 40,000 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து இருந்தும், டிக்கெட்டுகள் அனைத்து உடனடியாக விற்று தீர்ந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கட்டண உயர்வை பரிசீலித்து நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}