சென்னை: விஜயசேதுபதியின் 50வது படமான மகாராஜா தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கி நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, விஜோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார், தனது மனைவி இறப்பிற்கு பின் தனது மகளை வளர்ந்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கிறது. இதையடுத்து காவல் நிலையம் சென்ற விஜய் சேதுபதி லட்சுமி காணாமல் போனதாக புகார் செய்கிறார்.யார் அந்த லட்சுமி, எதற்காக புகார் அளிக்கிறார். விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று பல கேள்விகளுக்கு இறுதியில் முடிவு கூறப்பட்டிருக்கும் படம் தான் மகாராஜா.
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}