கர்நாடகா மாடலை கையில் எடுக்கும் மகாராஷ்டிரா.. பவார் தலைமையில் அதிரடி திட்டம்!

May 15, 2023,03:01 PM IST
மும்பை: கர்நாடக மாடலே இனி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் பிரதான ஆயுதமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் திட்டமிட்டு வெற்றியை கொத்திக் கொண்டு போனது போல மகாராஷ்டிராவிலும் அதிரடி காட்ட தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் தீர்மானித்துள்ளன.

கர்நாடகாவில் பலம் பொருந்திய பாஜக ஆட்சி இருந்து வந்தது. "ஆபரேஷன் லோட்டஸ்" என்று கூறி எம்.எல்.ஏக்களை பிற கட்சிகளிலிருந்து அபகரித்து அமைக்கப்பட்ட ஆட்சிதான் கர்நாடக பாஜக ஆட்சி. தற்போது அந்த ஆட்சியை அதிரடியாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது காங்கிரஸ்.

கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு அதிர வைத்துள்ளது காங்கிரஸ். இதுவரை இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு மிகப் பெரிய அடியையும் கொடுத்துள்ளது. வாக்கு வங்கி சிதறவில்லை என்ற போதிலும் கூட பாஜக தனது முக்கிய பலமான லிங்காயத்துகளின் ஆதரவை இழந்துள்ளது. இதற்குக் காரணம், ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல முக்கியங்களை காங்கிரஸ் தன் பக்கம் இழுத்ததுதான். மேலும் லிங்காயத்துகளுக்கு பெரிதாக எதுவும் பாஜக செய்யாமல் போனதும் அதற்கு எதிராக போய் விட்டது.



இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக துல்லியமாக திட்டமிட்டு, அழகாக ஸ்கெட்ச் போட்டு மிகவும் விரிவான முறையில் தனது தேர்தல் உத்திகளை வகுத்திருந்தது காங்கிரஸ். இதற்கு முக்கியக் காரணம் ராகுல் காந்திதான். அவரது ஆலோசனைப்படிதான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அணுகுமுறைகள் இருந்துள்ளன. சசிகாந்த் செந்தில் போன்ற புத்திசாலிகளைக கரெக்டாக பயன்படுத்தியதும் அவர்களுக்கு எளிதாகி விட்டது. அதை விட முக்கியமாக, டி.கே.சிவக்குமார் போன்ற போராளியை மாநிலத்  தலைமைப் பதவியில் அமர வைத்தது  கூடுதல் பலமாகி விட்டது.

ஒரு புத்திசாலியை வீழ்த்த நாம் அவனை விட மிகப் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பாஜகவை அப்படி போய்த்தான் வீழ்த்தியுள்ளது காங்கிரஸ். இந்த காங்கிரஸ்  வெற்றி பார்முலா நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. அனைவரையும் ஒரே புள்ளியில், காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்க இந்த கர்நாடக வெற்றி மிகப் பெரிதாக உதவும் என்றும் நம்பப்படுகிறது. அதற்கான அறிகுறி முதலில் மகாராஷ்டிராவில் தென்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா,மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத் பவாரை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கர்நாடக காங்கிரஸ் வெற்றி மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. இதை வைத்துத்தான் இனி எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும். அனைவரும் இணைய வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் நல்லதொரு செய்தியைக் கொடுத்துள்ளன. இங்கு ஏற்பட்டது அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். இதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி விட்டோம் என்றார் பவார்.

இதேபோன்ற மன நிலையில்தான் மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணியும் உள்ளது. அக்கூட்டணியில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ளன. அடுத்த ஆண்டு முற்பகுதியில் மகாராஷ்டிர சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளது. அதேபோல லோக்சபா தேர்தலும் வரவுள்ளது. இந்த இரு தேர்தல்களையும் ஒருங்கிணைந்து சந்திக்கவும், கர்நாடகா பாணியில் திட்டமிட்டு செயல்படவும் இந்தக் கூட்டணியின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்