சென்னை: மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியடிகளின் 78வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அஷசரிக்கப்பட்டு வருகிறது. 1948ம் ஆண்டு இதே நாளில்தான் நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திர இந்தியாவில் மதவெறி காரணமாக காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுத் துயரம் நடந்த இந்நாளில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் நாமும் கலந்து கொண்டோம்.
மனிதர்களாகப் பிறந்த அனைவரும் சமம் - எவ்வித பேதமும் கூடாது என்கிற உணர்வினை என்றென்றும் விதைக்க உறுதி ஏற்போம்.
அண்ணல் காந்தியின் பணிகளை போற்றுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}