- மஞ்சுளா தேவி
சென்னை: மைலாஞ்சி படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், அப்படத்தின் தலைப்பையும் மாற்றியுள்ளனர். மைலாஞ்சி என்ற பெயர் பத்து வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து இருந்ததாம். இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என இயக்குனர் அஜயன் பாலா கூறினார்.
காதல் இல்லாத மனிதர்கள் உண்டோ.. மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என காதல் இல்லாதவர்கள் யாரும் இல்லை. காதல் இல்லாமல் ஒரு அணுவும் இயங்காது. ஏனென்றால் ஒருவர் மீது கொண்ட காதலால் தான் அவர்களுக்கு நாம் கட்டுப்பட்டு வாழ்கிறோம்.

காதல் ஓவியம் ..பாடும் காவியம் .. என்பது போல காதலை மையமாக கொண்ட பல படங்களும் ,பாடல்களும் 90களில் இருந்து இன்று வரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அந்த வகையில் தற்போது காதலை மையமாக வைத்து "அஜயன் பாலாவின் மைலாஞ்சி" என்ற படம் காதலர் தினம் அன்று திரைக்கு வர உள்ளது. இப்படம் காதல் மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகிய காதல் கதையாக அமைந்துள்ளது.
பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான அஜயன் பாலா கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருகிறார். இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படம் அஜயன் பாலாவின் மைலாஞ்சி. இப்படத்தை அஜய் அர்ஜுன் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை வென்ற ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தில் நாயகனாகவும் ,கோலி சோடா 2 புகழ் கிரிஜா குரூப் நாயகியாக நடிக்கிறார்கள். மேலும் சிங்கம் புலி, முனிஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் மலைப்பிரதேசத்தில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் தலைப்பான மைலாஞ்சி தற்போது அஜயன் பாலாவின் மயிலாஞ்சி என்று மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, திரைப்பட தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே 10 வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தோம் .இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகான காதல் கதையாக இதை செய்துள்ளோம். பெரும்பாலான காட்சிகள் போட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சி பூர்வமான வகையிலும் உருவாகி உள்ளது .மேலும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம் .இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும் எனவும் கூறினார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}