சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், உடனுக்குடன் பரிசீலனைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 24 மாவட்டங்களில் உள்ள, 184 தாலுகாக்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதேபோல் நகர உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு புகார்கள் மீதான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல் பட்டா மாறுதல் உட்பட 15 துறைகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒருங்கிணைந்து 44 அடிப்படை சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 12,525 ஊரகப் பகுதிகளில் 2,344 முகாம் நடத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டில் மட்டும் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது திமுக அரசு. மேலும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு. மக்களின் அரசு என்பதற்கு இத்திட்டமே சான்று என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களைக் கொண்டாடுபவர்களுடன் இருங்கள்.. Stay where you are celebrated!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
உங்கள் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.. Guard your mind
பொங்கிப் பெருகும் உணர்வுகள்.. துள்ளிக் குதிக்கும் உற்சாகம்.. Emotions in every way!
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
{{comments.comment}}