- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
பார் போற்றும் பாவேந்தர் ...
கவி அமுதை பருகிடுவோம்.... !
கவி நடையில் காதல் மொழி கனிந்திடவே....
கருத்தை தந்து கனவுகளை கவியில் வைத்து .. ...
கார்மேக புலவனாக புவனம் போற்ற வாழுகின்றார்..... !
தமிழுக்கு அமுதமென்ற
புகழ் கொடுத்து.....
அழகாக
தமிழமுதை பருகிடவே.....
ஆனந்த கவி
படைத்து..... !
விண்ணுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்து ......

செம்மொழியில்.....
எண்ணங்களை எடுத்துரைத்து......!
சித்திர சோலைதனில்.,....
வீரர்கள் சிந்திய
செந்நீரின்.....
பெருமைதனை
போற்றி.....
செங்கதிர் விளைந்த
தேசத்தில்.....
நெற்றி வியர்வை சிந்தும்....
உழைப்பினை புகழ்ந்து...... !
குயில் கூவும் கானமும்....
மயிலாடும் நடனமும்.......
கிளி பேசும் மொழிகளும்.....
பூக்கள் மலரும் வேளையில்.....
ஈக்கள் எடுக்கும் தேனென ......
இன்ப கவி பிறக்கும் கருவாகி..... !
சஞ்சீவி மலை சாரலில்......
பர்வத மலையின்
அழகினில்......
கண்ணுக்குள் காட்சி தந்து......
காதல் மழையில் குளிரவைத்தார்...... !
பாவேந்தர் புகழ் பாடிடுவோம்......
பாடல் சுவை அருந்தி
போற்றிடுவோம்.....
(இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்.. சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}