- சிவ.ஆ.மலர்விழி ராஜா
வாழ்க்கை ஒரு நாடக மேடை...........
நடிப்பது கூட நாணயம் போலே.........!
"நா" நயமே இல்லையெனில்.....
வாழ்க்கை நிலை மாறி சென்றிடுமே........
உறவுகளும் நட்புகளும் நமை பார்த்து ....
நகைத்திடுமே.......!
வரவுக்குள் செலவை வைத்து.....
வரவதினில் சிறிது சேர்த்து......

வருங்காலம் மனதில் வைத்தால்.....
வைரம் போல் மின்னிடலாம்.....!
அடுத்த வீட்டு பெண்களுமே.....
அலங்கார சிலை போல அடுக்கடுக்காய்....
நகை போட்டு......!
வாழ்கின்ற நிலை பார்த்து.....
அவசரத்தில் கடன் பெற்று.....
ஆடம்பர பொருள் சேர்த்து....
ஆனந்தமாய் வாழ்வதெங்கே.....?
வாழும் நிலை மாறி விடும்.....
நித்திரையும் கெட்டு விடும்......!
பொதுவெளியில் செல்வதற்கும் பயம்....
பூதம் போல் தொடர்ந்து வரும்....!
ஏனென்று தெரியாமல் பிள்ளைகளும்....
ஏங்கி விடும்....!
வாழும் வழி தெரியாமல் மதி கூட....
மயங்கி விழும்.....
உயிர்கள் கூட சில நேரம் கடனை போல
கசந்து விடும்....!
கடன் பட்ட நெஞ்சத்தால் தலைக்குனிவு......
தானே வரும்....!!
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை... அண்ணாமலை விமர்சனம்!
தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!
அம்மாவின் அன்பு!
கடன் -தலைக்குனிவு
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!
ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?
துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!
{{comments.comment}}