கொச்சி : கடும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் வயநாடு பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ரூ.3 கோடி நன்கொடை வழங்குவதாக மலையாள நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜூலை 30ம் தேதி கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுண்டக்கை, சூரன்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் வாழ்ந்த நூற்றக்கணக்கான மக்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை 364 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் மண்ணிற்குள் புதைந்துள்ளதாக சொல்லப்படும் 250க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நிலச்சரிவு நடைபெற்ற வயநாட்டிற்கு இன்ற நேரில் சென்று பார்த்த நடிகர் மோகன்லால், வயநாடு புனரமைப்பு பணிகளுக்காக விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். இதுவரை இப்படி ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதே இல்லை எனவும் மோகன்லால் வேதனை தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகளுக்காக ரூ.3 கோடியை நாங்கள் வழங்குகிறோம். தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் நன்கொடை வழங்க தயாராக உள்ளோம். இந்தியாவில் இது போன்ற மோசமான பேரிடரை இதுவரை சந்தித்தது கிடையாது. இழந்ததை மீண்டும் கொண்டு வர முடியாது. அதனால் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனி எப்படி உதவலாம் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.
கொட்டும் மழை, இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஏராளமான மண் உள்ளது. இன்னும் மண்ணிற்குள் இருப்பவர்கள் உயிருடன் இருப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது. எத்தனை அடி ஆழத்திற்கு மண் புதைந்துள்ளது என்பது தெரியவில்லை என்றார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரன்மலை, முண்டகை கிராமங்களுக்கு சென்று பார்வையிட்ட மோகன்லால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரையும் சந்தித்து பேசினார். நடிகர் மோகன்லால் இந்தியா பிராந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கெ்ானலாகவும் இருந்து வருகிறார். ராணுவ உடையில் சென்று அவர் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}