"கார்கேதான் பிரதமர் வேட்பாளர்".. பஞ்சாயத்தைத் தொடங்கி வைத்த மமதா.. அவர் பதில் சூப்பர்!

Dec 20, 2023,08:18 AM IST

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பதே நமது முதல் இலக்காக இருக்க வேண்டும். பிறகுதான் பிரதமர் வேட்பாளர் குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலளித்துள்ளார்.


இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே பெயரைப் பரிந்துரைத்தனர். நாட்டின் முதல் தலித் பிரதமராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


ஆனால் கூட்டத்தில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்க்படவில்லை. ஆனால் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, முதலில் நாம் வெல்வது குறித்து இலக்காக தீர்மானித்து செயல்படுவோம். பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய நமக்கு அவகாசம் இருக்கிறது. தேர்தலில் வெல்வதும், நமது பலத்தை அதிகரிப்பதும்தான் இப்போதைய முக்கிய திட்டமாக இருக்க வேண்டும் என்று கார்கே பதிலளித்துள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.




கார்கே மேலும் பேசும்போது, நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.  நமது வெற்றி மட்டுமே எனது நோக்கமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நமது கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற வேண்டும். பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமரை எம்.பிக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றார் கார்கே.


கூட்டத்திற்குப் பிறகு கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் பிரதமர் மோடி மிகவும் முரட்டுத்தனமாக செயல்பட ஆரம்பித்துள்ளார். எந்த அதிகாரமும் நிரந்தரம் கிடையாது என்றார் காட்டமாக.


இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கூட்டணிக் கட்சிகள் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவாக உள்ளன. அதேசமயம், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸுக்கு எதிரான மன நிலையில்தான் ஆரம்பத்திலிருந்தே உள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி பிரதமர் ஆவதை அவர்கள் விரும்பவில்லை. கூட்டணி இல்லாமல் பாஜகவை சமாளிப்பது கடினம் என்பதால்தான் அரை மனதுடன் இந்தியா கூட்டணியில் நீடித்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே பெயரை அவர்கள் கையில் எடுத்திருப்பது எந்த நோக்கத்தில் என்று தெரியவில்லை.


ஆனால் கூட்டணிதான் முக்கியம், கூட்டணியின் தலைவர், பிரதமர் வேட்பாளர் என யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.. காங்கிரஸுக்குப் பிரச்சினையே இல்லை என்று ஆரம்பத்திலேயே ராகுல் காந்தி தெளிவாக சொல்லி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்