வாங்க, அடிச்சு விளையாடுவோம்.. தமிழ்நாடு புதிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உற்சாகம்!

Jun 28, 2026,12:48 PM IST
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் வாங்க அடிச்சு விளையாடுவோம் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாணிக்கம் தாகூர்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உருவாக்கவும் ஒரு வலுவான தலைமை தேவை என கட்சி மேலிடம் கருதியதாகத் தெரிகிறது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, கட்சியின் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மாணிக்கம் தாகூருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான உறவை சமன்படுத்துதல் போன்ற முக்கிய இலக்குகளை மையமாக வைத்தே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியில் திமுக எதிர்ப்பு அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் ஆவார். 



யார் இந்த மாணிக்கம் தாகூர்?

மாணவப் பருவத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மாணிக்கம் தாகூர். இந்திய இளைஞர் காங்கிரஸின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி, அகில இந்திய அளவிலும் தன் முத்திரையைப் பதித்தவர். விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் திறம்படச் செயல்பட்டு வருகிறார். கட்சியின் அகில இந்தியச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மாணிக்கம் தாகூரின் நியமனம் தமிழக காங்கிரஸில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இளைஞர்களைக் கட்சி நோக்கி ஈர்ப்பதிலும், சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசுவதிலும் வல்லவர்.

"கட்சியின் இந்த புதிய முடிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு காங்கிரஸ் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, கட்சியை மேலும் வலுப்படுத்த உதவும்" என்று மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நாளை பதவியேற்கவுள்ளார். தனது நியமனத்தைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோவில், வாங்க அடிச்சு விளையாடுவோம் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!

news

மனநலன் காப்போம்.. மனம் செம்மையானால்.. மருந்தே தேவையில்லைங்க!

news

2 Kutti கதைகள்.. காலம் கடந்த பிறகு.. சமயோசித புத்தி!

news

Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

news

கேளாக் கடனும் கெடும்.. கேட்பின் உறவும் கெடும்.. அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகள் (2)

news

தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

news

டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!

news

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

news

காஞ்சி கிருபாவின் சிந்தனைச் சிறகுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்