பூசன் சர்வதேச திரைப்பட விழாவில்.. மணிரத்தினத்தின் "பாரடைஸ்"!

Oct 04, 2023,02:43 PM IST
- சங்கமித்திரை

சென்னை: மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த நியூட்டன் சினிமாவின் "பாரடைஸ்" மலையாளத் திரைப்படம் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது!

தென்கொரியாவின் பிரசித்தி பெற்ற விழாதான், இந்த பூசன் சர்வதேச திரைப்பட விழா. இந்த விழாவின் முதன்மை விருதான "கிம் ஜெசோக்" விருதிற்கும் பாரடைஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

உலகப் புகழ் பெற்ற இயக்குநரும் பல சர்வதேச விருதுகளைப் பெற்றவருமான பிரசன்னா விதானகே இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2022-ல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும், விலை உயர்வும் இலங்கையில் நாடுதழுவிய போராட்டம் வெடிப்பதற்குக் காரணமாக இருந்தது. 



இச்சமயத்தில் தங்களுடைய ஐந்தாம் திருமண விழா கொண்டாட அங்கு செல்லும் மலையாளிகளான வெப் சீரிஸ் தயாரிப்பாளரான, காணொளி பதிவாளர் (vlogger) மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கே எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகளையும், விசித்திரமான அனுபவங்களையும் காட்சிப்படுத்தும்' 'பாரடைஸ்'  ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள் .

பிரச்சினை வரும்போது தான் மனிதர்களின் உண்மை முகம் தெரிகிறது என்பதைக் கூறும் இப்படம், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் பேசுகிறது. அதோடு இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான சம்பவங்களையும் இடங்களையும் கதையோட்டத்தில் காணலாம் என்கின்றனர், இப்படத்தின்  தயாரிப்பாளர்களான ஆன்டோ சிட்டிலப்பள்ளியும், ஸனிதா சிட்டிலப்பள்ளியும். 

மலையாளத்தில் பல முக்கிய படங்களில் நடித்த ரோஷன் மேத்யூவும், தர்ஷனா ராஜேந்திரனும் இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியும்,  படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும், ஒலிக்கலவையை தபஸ் நாயக்கும், இசையை "கே"யும் கையாண்டுள்ளனர். 

பாரடைஸ் உன்னதமான உணர்வுகளின் கோர்வையோடு, சினிமாவின் அழகியலை அருமையாக கையாண்டிருக்கும் ஒரு தலைசிறந்த இயக்குனரால் எடுக்கப்பட்ட படமாகும்.  அதோடு குறிப்பிடத்தக்க நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சேர்ந்து நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படமுமாகும். இப்படத்தை வழங்குவதில் மெட்ராஸ் டாக்கீஸ் பெருமை கொள்கிறது என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவா ஆனந்த்.

பாரடைஸ் திரைப்படத்தின் முதல் திரையிடல் இம்மாதம் ஏழாம் தேதி தென் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. படத்தின் முக்கிய நடிகர்களும் படக்குழுவினரும் இதில் பங்கு பெறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்