சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் திரையரங்கில் பயங்கரமான அனுபவம் கொடுத்த படம். சினிமாவை ஒரு மாயாஜாலத்தோடு இணைந்த படம் மிகச்சிறப்பாக படத்தை எடுத்துள்ளார் என்று இயக்குநர் கவுதம் மேனன் பாராட்டியுள்ளார்.
மலையாளத்தில் ஹிட் அடித்த ஜன்-இ-மேன் திரைப்படத்தை இயக்கிய சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்., 22ல் வெளியான படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் 2006ம் ஆண்டு கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நண்பர்களில் ஒருவர் குணா குகையில் கால் தவறி கீழே விழுந்து விடுகிறார். அவரை மீட்க உடன் வந்த நண்பர்கள் படும் போராட்டம் தான் தற்போது வெளிவந்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் கதையாகும். இது ஒரு உண்மைச் சம்பவம் ஆகும்.

இப்படத்தில் சவ்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி எஸ் பொதுவால், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜீன் பால் லால் என மலையாள சினிமாவின் இளம் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியாகி உலகம் முழுவதிலும் சுமார் 100 கோடிக்கு வசூல் படைத்துள்ளது மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தைப் பார்த்த இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தை பாராட்டியுள்ளார். அதில், திரையரங்கில் பயங்கரமான அனுபவம் கொடுத்த படம். சினிமாவை ஒரு மாயாஜாலத்தோடு இணைத்த படம். மிகச் சிறப்பாக படத்தை எடுத்துள்ளனர். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற பாடல் வந்தபோது நான் முதல் முதலில் குணா படம் பார்த்தது என் நினைவுக்கு வந்தது எனக் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}