நடிகர் மனோஜ் உடல் தகனம்.. கண்ணீர் மல்க விடை கொடுத்த பாரதிராஜா குடும்பம்

Mar 26, 2025,08:32 PM IST

சென்னை: சென்னை நீலாங்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் மனோஜின் உடல்  தகனம் செய்யப்பட்டது.


நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதி தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த வருஷமெல்லாம் வசந்தம், தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா, சமுத்திரம், உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.


அதிலும் எங்கே அந்த வெண்ணிலா, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், திருப்பாச்சி அருவாள ஆகிய பாடல்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளன. அதன்பின்னர்  இயக்குனராகவும் வலம் வந்த மனோஜ் மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். சினிமாவில் அப்பாவைப் போலவே மிகப்பெரிய இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற இவரது கனவு நனவாகவில்லை. 




48 வயதான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓய்வில் இருந்த  மனோஜ் பாரதிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் இறப்பு செய்தி தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருந்தனர்.


இந்த நிலையில், மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருந்தனர்.


இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை இவரது உடல்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  இறுதி ஊர்வலமாக  எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த உடல் தகனத்தின் போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உடன் இருந்தார். மேலும், பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

news

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

அதிகம் பார்க்கும் செய்திகள்