"டிஸ்மிஸ்".. நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு .. சென்னை செஷன்ஸ் கோர்ட் அதிரடி உத்தரவு!

Nov 24, 2023,06:34 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.


லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு கோரியது தேசிய மகளிர் ஆணையம். 


இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆயிரம் விளக்கு  அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு  பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று தவறுதலாக குறிப்பிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்று பின்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.




இந்த மனு குறித்த விசாரணை நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து, திரிஷாவிற்கு எதிராக மன்சூர் அலிகான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. திரிஷா தரப்பில் இருந்தும் எந்த புகாரும் தரப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 


மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு மன்சூர் அலிகான் கட்டுப்படுவார் என்று கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவை ஒத்திவைத்திருந்தார். தற்போது மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக கூறியதைப் பதிவு செய்து கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி.


முன்னதாக திரிஷா குறித்துப் பேசிய பேச்சுக்காக அவர் திரிஷாவிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்