நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும், அதற்கான முக்கியத்துவத்தையும் வகுத்து வைத்தார்கள். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு, கார்த்திகையில் சிவன், முருகன், ஐயப்பன் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு என வைத்தார்கள். ஆனால் மார்கழியில் மட்டும் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வது நன்மையை தரும் என வைத்தார்கள்.
மார்கழி மாத வழிபாடு :

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசலில் கோலமிட வேண்டும் என்ற முறையையும் வகுத்தார்கள். மற்ற எந்த மாதத்திலும் இல்லாமல் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பாக சொல்லப்பட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. அறிவியல் ரீதியாக, மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஓசோன் படத்தில் இருந்து வரும் காற்று பூமியில் அதிகம் நிறைந்திருக்கும். இந்த காற்றினை நாம் சுவாசிக்கும் போது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோமிட வேண்டும். சாணம் நகரங்களில் கிடைப்பது அரிது. எனவே தண்ணீர் தெளித்து கோமிடுவது நம் உடலுக்கும், மனதிற்கும் அதீத நன்மை பயக்கும்.
நம் உடலில் 80 சதவீதம் ஆக்ஸிஜன், 20 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயும் இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய வாழ்க்கை மாற்றத்தால் பழக்க வழக்கங்களின் தவறுகளால் கூடுதலாகி விட்ட கார்பன் டை ஆக்சைடை விரட்டி ஆக்ஸிஜனை நம் உடல் பெறுவதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகும். இதனால் நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் தான் இந்த வாயுவை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
சாதாரணமாக சொன்னால் நம் மக்கள் கடைபிடிப்பது கடினம். எனவே தெய்வத்தின் பெயரால் செய்ய வேண்டும் என்று கூறினால் தான் நாம் அதனை பின்பற்றுவோம் என நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}