- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 :
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.

பொருள் :
சூரிய பகவானின் தேரோட்டியான அருணன் கிழக்கிற்கு வந்து விட்டான். உன்னுடைய முகத்தில் இருக்கும் கருணை ஒளியை போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து தன்னுடைய கதிர்களை விரித்து இருளை நீக்கி விட்டான். உன்னுடைய கண் மலர்களை போல் தாமரை குளத்தில் மலர்கள் மலர்ந்து விட்டன. வண்டு இனங்களில் அவற்றில் தேன் குடிக்க கூட்டமாக திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் எங்கள் சிவ பெருமானே! அருளாகி செல்வத்தை வாரி வழங்குவதற்காக ஆனந்த மலை போலவும், அலை வீசும் கடலை போல் அருளை ஓயாமல் வழங்கிக் கொண்டிருப்பவனே கண் விழிப்பாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
{{comments.comment}}