சென்னை: கல்யாணம் என்பது கட்டாயம் அல்ல, அது ஒரு சாய்ஸ் தான் என்று நடிகர் சிம்பு பரபரப்பான பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிம்பு, தனது திருமணம் குறித்த ரசிகர்களின் நீண்டகால கேள்விக்கு மிகவும் வெளிப்படையான பதிலை தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், மொபைல் போன்கள் மனித உணர்ச்சிகளை மாற்றிவிட்டன. காதலும் பிரிவும் இப்போது வேகமாக நடக்கிறது. ஆனால், ஆழமான உறவுகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

சமூகம் சொல்கிறது என்பதற்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிவிட்டோம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் (Personal Choice) என்றும், வாழ்க்கையில் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்பது ஒரு விதி அல்ல. ஒரு துணை வேண்டுமென்று தோன்றும் போது, சரியான நபர் கிடைக்கும் போது அது தானாக நடக்கும். அதைத் தேடி ஓடுவதிலோ அல்லது கட்டாயப்படுத்துவதிலோ எனக்கு உடன்பாடில்லை என்றும்,
தற்போது தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும், தனது கலைப்பயணத்திலும் ஆன்மீக தேடலிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிம்புவின் இந்த கருத்துக்கு இணையதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}