கில்லி.. எதிர்கால தமிழக அரசியலில் .. தவிர்க்க முடியாத புள்ளி தான்.. ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

Nov 06, 2024,05:34 PM IST

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத புள்ளி ஆக திகழ்வதாக தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் இருந்து வந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா காலத்தில் அவருடைய செல்லப் பிள்ளை போல இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக மாறினார். ஓபிஎஸ் நடத்தி வரும் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார் மருது அழகுராஜ்.


அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத புள்ளியாக மாறி வருவதாக அவர் கவிதை நடையில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:




விஜய்யை விமர்சிக்க வேண்டாம்  என்கிற திமுக வின் நிலைப்பாடு..


அதே 

விஜய்யை 

விமர்சிக்க கூடாது  என்கிற 

எடப்பாடியின் 

உத்தரவு..


விஜய்யை 

தரம்தாழ்ந்து 

விமர்சிக்கும் 

சீமானின் 

பதற்றம்..


விஜய்யை 

முன்வைத்து 

திருமாவுக்கு 

ஏற்பட்டுள்ள 

குழப்பம்..


தங்கள்

சித்தாந்தத்தோடு மோதும்

விஜய்யை 


எதிர்கொள்ள 

தீவிர 

திட்டமிடுதலில் 

பாஜக..


இப்படி 

ஒட்டுமொத்த 

கட்சிகளையும் 


ஒரு மாநாட்டை 

வைத்தே

உதறலெடுக்க 

வைத்திருக்கிறார்  விஜய்

என்றால்


கில்லி  எதிர்கால தமிழக அரசியலில் 


தவிர்க்க 

முடியாத 

புள்ளி தான்..


கட்சிகளின் கையிருப்பு இதுதான்


இதேபோல தமிழ்நாட்டு கட்சிகளின் வாக்கு வங்கி குறித்தும் தனது மருது அழகுராஜ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய்க்கு பெருவாரியான வாக்குகள் கிடைக்கும் என்று அவர் ஆரூடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து:


இளைஞர்களை பெருவாரியாக கொண்ட கட்சியாக 

திமுக  பா.ஜ.க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை உருவாகி விட்டன..


அதிலும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால்  பெண்களின் ஆதரவை பெருமளவில் ஆளும் திமுக வசப்படுத்தி வரும்  நிலையில்..  


படித்தவர்கள் மத்தியில் பா.ஜ.க வுக்கும் அதன் 

தமிழ் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கூடுதல் ஆதரவு என்றிருக்க..


மாணவர்கள்  இளைஞர்கள்  இளம் பெண்கள் முதன்முறையாக வாக்களிக்க காத்திருக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் நடிகர் விஜய்யை ஆதரிக்கவே பெரும் வாய்ப்பு இருக்கிறது.


அதிமுகவை பொருத்த வரை இளைஞர்களை ஈர்க்கும் வழியற்று  அம்மாவுக்கு பிறகு பெண்களின் ஆதரவையும் பெருமளவில்  இழந்து அது முதியோரது முகாமாகவே காட்சியளிக்கிறது. 


என்ன செய்வது மாளிகையே ஆனாலும் பராமரிப்பு இல்லாவிட்டால் அது பாழடைந்த பங்களா தானே.. என்று கூறியுள்ளார் மருது அழகுராஜ்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்