மாசி மாத செவ்வாயும், சேர்ந்து வந்த சஷ்டி திதியும்.. கந்தசஷ்டி படித்து முருகன் அருள் பெறுவோம்!

Feb 18, 2025,02:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாசி மாத சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று தேய்பிறை சஷ்டி திதி. 18 .2 .2025 பிப்ரவரி 18 ஆம் நாள் மாசி மாதம் சஷ்டி திதி ,அதுவும் தேய்பிறை சஷ்டி திதி ஆகும். மாசி மாதம் வரும் சஷ்டி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.


முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையும் சஷ்டி திதியும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.


மாசி மாத சிறப்புகள்:




மாசி மகம் என்கிற அற்புதமான வைபவம் இந்த மாசி மாதத்தில் வருகிறது. மாசிக்கு நிகரில்லை என்பர் .மாசி கயிறு பாசிப் படியாது என்கிற பெருமை மாசி மாதத்திற்கு உண்டு.


மாசி மாதம் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது . அதேபோல் மாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது .மகா சிவராத்திரி பிப்ரவரி 26  அன்று வருகிறது. சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இரவு முழுதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள்.


இத்துணை பெருமை மிகுந்த மாசி மாதம் வரும் சஷ்டி திதியில் வேலவனை வேல் கொண்டு நம்மை காத்தருளும் முருகப்பெரு மானை வணங்குவோம்.


வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தரும் முருகப்பெருமானை வேல் கொண்டு அருள் புரியும் கந்த கடவுளை வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் என்று சொல்லி அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம் .அபிஷேகப் பொருட்கள் ,மலர்களில் செவ்வரளி வாங்கிக் கொண்டு பூஜைக்கு  செல்வது சாலச்சிறந்தது.


வேலுண்டு வினையில்லை ,கந்தன் உண்டு கவலை இல்லை, நம் வினைகள், மனக்கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பான் குமரன். வீடுகளில் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி மலர்களைக் கொண்டு முருகனை அலங்கரிக்கவும். செவ்வரளி மலர் கொண்டு அலங்காரம் செய்வது உகந்தது. முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண்டு நம் வேண்டுதல்களை அவனிடம் முறையிட நமக்கு எல்லாம் தந்தருள்வான் வேலவன்.


நம்மால் இயன்ற நைவேத்தியம் செய்து பொங்கல் ,எலுமிச்சை சாதம் ,பால் நாட்டுச்சர்க்கரை, பழ வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம் . எதிரிகளையும் எதிர்ப்புகளையும் துவம்சம் செய்வார் ஏறுமையில் ஏறி விளையாடும் முருகன்.


காலை மாலை கந்த சஷ்டி கவசம் ,பாராயணம் செய்வதும் குமாரஸ்தவம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், ஸ்கந்த குரு கவசம் ,வேல்மாறல் போன்றவற்றை ஒலிக்க கேட்பது அல்லது நாம் படிப்பதும் அனைவருக்கும் மன நிம்மதி கொடுக்கும் .மனம் தெளிவு பெற்று சந்தோஷமான வாழ்வை அனைவரும் பெறுவோமாக.


வேலும் மயிலும் சேவலும் துணை! அரோகரா! அரோகரா! அரோகரா!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்