ஜிஷிஷான்: சீனாவில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
சீனாவின் கான்சு மற்றும் குயிங்காய் ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக இருந்தது.
பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மிகப் பெரும் பொருட் சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையம் லிகுகோ நகரில் இருந்தது. குயிங்காய் மாகாணம் என்பது, திபெத்திய இமயமலைத் தொடருக்கு அருகே இருக்கும் பகுதியாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும்.

நள்ளிரவு நிலநடுக்கத்தால் வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. சாலைகளிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடி வெளியில் வந்தனர். பல இடங்களில் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் தடை பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதுவரை 111 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்தும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிபர் ஸி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}