ஊட்டி: தென் மேற்குப் பருவ மழை சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

பந்தலூர், கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கேரளா, நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹசன், சிக்மகளூர் ஆகிய பகுதிகளில் பெரு மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்துதான் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அணைகளுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}