கவனிக்காத பிள்ளைகள்.. சிலிண்டரை வெடிக்க வைத்த டாக்டர்.. மனைவி பலி.. மயிலாடுதுறையில் கொடுமை

Jan 30, 2025,08:35 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், வயதான தங்களை பிள்ளைகள் சரியாக பார்த்துக் கொள்ளாததால் வேதனை அடைந்த ஹோமியோபதி டாக்டர் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர் உயிருக்குப் போராடி வருகிறார்.

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் இளங்கோவன். இவருக்கு வயது 69. இவரது மனைவி செந்தாமரை (வயது-59). இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன், கீழ் வீட்டில் வசித்து வருகிறார். மேல் வீட்டில் இளங்கோவன் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.



இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செந்தாமரை சிறுநீரக கோளாறால்  பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் அவதிப்பட்டுள்ளார். இவர்களது மகன் மற்றும் மகள்கள் யாரும் இவர்களை கவனிக்காமல் இருந்துள்ளனர். பிள்ளைகள் சரிவர பார்த்துக் கொள்ளாததாலும், நோயால் அவதிப்பட்டு வந்ததாலும் வேதனை அடைந்த இளங்கோவன் தம்பதி தற்கொலை மூலம் உயிரை நீக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த சிலிண்டரை வெடிக்க வைத்துள்ளார் இளங்கோவன். இதில் அவரது மனைவி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இளங்கோவன் உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தார். விரைந்து வந்த போலீஸார் தீயை அணைத்து விட்டு வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, மனைவியின் மடி மீது தலை வைத்தபடி தீயில் உடலின் முக்கால்வாசிப் பாகங்கள் கருகிய நிலையில் போராடிக் கொண்டிருந்தார் இளங்கோவன்.

அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்