சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது தோள்பட்டையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். இந்நிலையில் இந்த பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததால் வைகோவுக்கு வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்புகள் கூடுவதற்காக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்தது. தற்போது எலும்புகள் கூடி விட்டதால் அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
80 வயதாகும் வைகோ, ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 1990களில் திமுக., உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய வைகோ, பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை துவக்கினார். 3 முறை ராஜ்யசபா எம்பி.,யாகவும், இரண்டு முறை லோக்சபா எம்பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். திமுக, அதிமுக, தேமுதிக என பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தமிழகத்தில் பல தேர்தல் களங்களை சந்தித்தவர் வைகோ. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}