சென்னை: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட குருவான பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்.
82 வயதான பங்காரு அடிகளார், மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர். ஆன்மீக குருவான பங்காரு அடிகளார் பல காலமாக பல்வேறு ஆன்மீகத் தொண்டுகளைச் செய்து வந்தார்.
சித்தர் பீடத்தில் பெண்கள்தான் முழுக்க முழுக்க பூஜைகளைச் செய்வார்கள். இது தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் மிகவும் புரட்சிகரமான விஷயமாக இருந்தது. ஆன்மீக சித்தர் பீடத்தின் மூலமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுவி நடத்தி வந்தார் பங்காரு அடிகளார்.
இன்று தனது சித்தர் பீட குடிலில் வழக்கம் போல ஓய்வில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்காரு அடிகளாரின் மரணச் செய்தி அவரது பக்தர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் ஆதி பராசக்தி பீடத்தின் கிளைகள் உள்ளன. அனைத்துப் பக்தர்களும் தற்போது பெரும் சோகமடைந்துள்ளனர்.
2019ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் பங்காரு அடிகளார். அனைத்துத் தரப்பினரின் அன்பு, மரியாதையைப் பெற்ற பங்காரு அடிகளாரின் மரணம் ஆன்மீக உலகுக்கு பேரிழப்பு ஆகும்.
நாளை இறுதிச் சடங்கு:
பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பக்தர்கள், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படவுள்ளது.
பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அடிகளாரின் கல்விச்சேவை, ஆன்மீகச் சேவையை அவர்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}