டெல்லி: பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதற்காக அட்வான்ஸ் ஷேர் பிரைவேசி(Advanced Chat Privacy)என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.
whatsapp ஆப் மூலம் தகவல்களை பெறவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப் மக்களின் தவிர்க்க முடியாத பயன்பாடாக மாறிவிட்டது. இதனால் உலக அளவில் அதிக பேர் பயன்படுத்தும் ஆப் என்பதால் மெட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டசிலும் பாடல்களை வைக்கும் வகையில் மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்தது. அதாவது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுவிட்டு பாடல்களை ஒலிக்க வைக்கும் வகையில் ஸ்டேடஸ் வைக்கமுடியும். இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். அதன்படி பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதற்காக அட்வான்ஸ் ஷேர் பிரைவேசி என்ற தளம் ஒன்று வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாட் எக்ஸ்போர்ட் செய்வது, புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை தானாக பதிவிறக்கம் ஆவதை பிளாக் செய்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்சப் குரூப்பில் இருந்து தகவல்கள் எடுப்பதையோ தடுக்கவோ இந்த advanced chat privacy என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}