தனிமை உணர்வு மனதை அழுத்துகிறதா? அப்படின்னா இதை டிரை பண்ணி பாருங்க

Jan 29, 2023,01:46 PM IST
சென்னை : மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. நண்பர்கள், குடும்பம், மனதிற்கு நெருக்கமானவர்கள் என யாருடனாவது இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எல்லோருக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. அனைத்தும் இருந்தும் கூட வாழ்க்கையில் சில நேரங்களில் அனைவருமே தனிமையை உணர்கிறோம். இந்த தனிமை உணர்வு நாளடைவில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, மனரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அப்படி நம்மில் பலரையும் வாட்டி வதைக்கும் தனிமையை விரட்ட அல்லது சமாளிக்க இதோ சில டிப்ஸ். இவற்றை பின்பற்றுங்கள், நிச்சயமாக தனிமை தரும் மனஅழுத்தத்தில் இருந்து விட முடியும். தனிமையும் இனிமையாகும்.



1. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கை தனித்துவமானது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

2. கடந்த கால கசப்பான நினைவுகளை மனதில் அசை போடுவதை தவிருங்கள். உங்களின் துன்பத்திற்கும், தற்போதைய நிலைக்கும், நீங்கள் உட்பட யாரும் காரணமல்ல என்பதை உணருங்கள்.

3. மனதிற்கு அமைதி தரும், சுவாரஸ்யத்தை தூண்டும் நல்ல புத்தகங்களை படியுங்கள்.

4. புதிதாக ஒரு சமையல், கைவினை பொருட்கள் தயாரிப்பு என ஏதாவது ஒரு வீடியோ பார்க்கிறீர்களா, அதனை அப்படியே செய்து பார்க்க முயற்சி செய்வதில் உங்கள் மனதை திருப்புங்கள்.

5. வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சி என உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள்.

6. தனிமை உணர்வு மனதை அழுத்தும் சமயங்களில் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்று விடுங்கள். உங்களுக்கு தேவையானது, வீட்டிற்கு தேவையானது என ஏதாவது ஷாப்பிங் செய்ய நேரத்தை செலவிடுங்கள்.

7. உடல்நிலை ஒத்துழைக்கா விட்டாலும் பட்டாம்பூச்சியாக சிறகடிக்க  அனைவரின் மனதும் ஆசைப்படும். அந்த ஆசையை ஆராய்ந்து பயணிக்க துவங்குங்கள். தனிமையாக சென்றாலும் உங்களுக்கு விருப்பான இடத்திற்கு பயணம் செய்யுங்கள்.

8. வீட்டை சுத்தம் செய்வது, அழகுபடுத்துவது, வீட்டில் உள்ள பொருட்களை மாற்றி அமைப்பது என உங்கள் கற்பனை திறனை வெளிப்படுத்தும் விஷயங்களில் கவனத்தை திருப்புங்கள்.

9. உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது, சமூக பணிகளில் தன்னார்வலராக செயல்படுவது என முகம் தெரியாத மனிதர்களுடனும் உங்களின் அன்பை பரிமாறி, உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

10. மனதிற்கு இனிமையான பாடல்கள் கேளுங்கள். அவற்றை நீங்களும் பாட முயற்சி செய்யலாம். அல்லது அந்த பாடலை கேட்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தையாக எழுதவோ, கவிதையாக மாற்றவோ, ஓவியமாக வரையவோ முயற்சி செய்யலாம்.

11. மற்ற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். மற்ற மாநில அல்லது வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ள உங்களின் நேரத்தை செலவிடுங்கள்.

12. நீங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளையே புதிய வழிகளில் செய்ய முயற்சி செய்யுங்கள்.

13. நகைச்சுவையான விஷயங்களை படித்தும், பார்த்தும் மனம் விட்டு சிரிங்கள்.

14. நீங்கள் தனிமையில் இல்லை என்ற நம்பிக்கையை உங்களுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

15. குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் உங்களின் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். சின்ன சின்ன அன்பு, சந்தோஷங்களில் உங்கள் மனதை மகிழ்ச்சியாக்க கற்றுக் கொள்ளுங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்