Chennai Metro.. மெட்ரோ கார்டு ஏப்ரல் முதல் நிறுத்தப்படும்.. சிங்கார சென்னை கார்டுக்கு மாறுங்க மக்களே

Jan 19, 2025,04:04 PM IST

சென்னை:  சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் கார்டுகள் ஏப்ரல் மாதம் முதல் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்குப் பதில் பயணிகள், சிங்கார சென்னை கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையின் முக்கியமான போக்குவரத்து சோர்ஸ் ஆக மாறி விட்டது மெட்ரோ ரயில். சென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கமும் வேகமாக நடந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர்கள் முழுவதும் மெட்ரோ ரயில்கள் மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவுள்ளன.


இந்த நிலையில் பயணிகளின் நலனைக் கருதி புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசும், மெட்ரோ ரயில் நிறுவனமும், ரயில்வே துறையும் சேர்ந்து கையில் எடுத்துள்ளன. அதுதான் சிங்கார சென்னை கார்டு. இந்தக் கார்டு பன்முக பயன்பாட்டை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கார்டு அமலுக்கும் வந்து விட்டது. 




அது என்ன சிங்கார சென்னை கார்டு?


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளதுதான் இந்த சிங்கார சென்னை கார்டு.


டெபிட் கார்டு போல இதைப் பயன்படுத்தலாம். அதாவது பிரீபெய்ட் கார்டு போல இது இருக்கும். இதில் குறைந்தது ரூ. 10 முதல் அதிகபட்சம் ரூ. 2000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்தி நாம் பயணிக்க முடியும். அது மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் தவிர்த்து, மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றிலும் கூட டிக்கெட் எடுக்காமல் இதைப் பயன்படுத்தி பயணிக்கலாம்.


இந்த கார்டைப் பெறவும், பராமரிப்புக்கும்,  ரீசார்ஜின்போதும் கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாக தரப்படும் கார்டு இது. ரீசார்ஜ் செய்து கொண்டு நம் விருப்பப்படி பயணிக்க இது உதவும்.  தற்போது உள்ள மெட்ரோ கார்டில் உள்ள பேலன்ஸ் தீர்ந்ததும் அதை மீண்டும் புதுப்பிக்காமல், மெட்ரோ டிக்கெட் கவுன்டரில் திருப்பிக் கொடுத்து விட்டால் டெபாசிட் தொகை ரூ. 50ஐ கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு நீங்கள் புதிய சிங்கார சென்னை கார்டை வாங்கி பயன்படுத்துங்கள்.


இந்தக் கார்டை டிக்கெட்டுகளுக்கான கட்டணத்திற்கு மட்டுமல்லாமல் ஏதாவது பொருட்கள் வாங்கவும் கூட பயன்படுத்த முடியும். அதற்காக இந்த கார்டில் உள்ள தொகையை குளோபல் மற்றும் ரீடெய்ல் என இரு பிரிவாக பிரித்து வைத்துள்ளனர். இதில் குளோபல் என்பது பயண டிக்கெட்டுகளுக்கான பயன்பாட்டுக்கு, ரீட்டெய்ல் என்றால் கடைகளில் பொருட்கள், பில் பேமென்ட் செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய பணம் என்று பொருளாகும்.


வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது புழக்கத்தில் உள்ள மெட்ரோ கார்டை முழுமையாக நிறுத்தி விட்டு சிங்கார சென்னை கார்டை பயன்பாட்டுக்கு முழு அளவில் பயன்படுத்த மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே மக்கள் இப்போதே சிங்கார  சென்னை கார்டை வாங்கி பயன்படுத்த ஆரம்பிக்குமாறு மெட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


சிங்கார சென்னை கார்டு எங்கு கிடைக்கும்?




அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்தக் கார்டைப் பெற முடியும். அல்லது https://transit.sbi/ என்ற இணையதளத்திலும் போய் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.


சிங்கார சென்னை கார்டு பெற விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்