சென்னை: டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ இடையிலான மெட்ரோ ரயில் சேவை அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவசர கால பராமரிப்புப் பணிகள் காரணமாக டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ இடையிலான சேவை இன்று நாள் முழுமைக்கும் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள், ஆலந்தூர் மெட்ரோவில் இறங்கி தொடர்ந்து பயணிக்கலாம் என்றும் மெட்ரோ நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தது.

அதேசமயம், ப்ளூ லைனில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ முதல் புனித தாமஸ் மலை மெட்ரோ வரையிலும் ரயில்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. இந்த மார்க்கங்களில் வாராந்திர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதால் வழக்கம் போல சென்டிரல் மெட்ரோவுக்கும், விமான நிலையம் மெட்ரோவுக்கும் இடையே போக்குவரத்துத் தொடங்கியிருப்பதாக மெட்ரோ நிறுவன செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெட்ரோ சேவைகள் இயல்பு நிலையை அடைந்துள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}