- J.லீலாவதி
மேட்டுப்பாளையம்: கோவையை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் குடிநீர் விநியோகம் சரியில்லை என்று பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் அறிவொளி நகரில் சுமார் 352 குடியிருப்புகள்
(குடிசை வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்) உள்ளன. இந்த வீடுகள் உள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என்று கூறப்படுகிறது. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இவர்கள் குடிநீருக்காக இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நடந்து தங்களுக்கு தேவையான நீரை எடுத்து வருகின்றனராம். இது தங்களுக்குப் பெரும் சிரமமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
தற்போது மழையின் காரணமாக அந்த குடிநீரும் சேரும் சகதியுமாக கலங்கிப் போயுள்ளதால் குடிக்கும் தகுதியில் அவை இல்லை என்றும் மக்கள் குறிப்பாக பெண்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று 18 . 11 . 25 மேட்டுப்பாளையம் குடிநீர் வாரியம் மூலம்
அதிகாரிகள் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இவர்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து நீரை தருவதாகவும் குழாய்களை அமைத்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள் வேண்டும் என்றும் தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
(J.லீலாவதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}