சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்ல், அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளிலிருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.28 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் போகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
{{comments.comment}}