மெக்சிகோ சிட்டி: பேரரசி என்று செல்லமாக அழைக்கப்படும் பழைய நீராவி ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற ஒரு இளம் பெண் பரிதாபமாக தலையில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செல்பி எடுப்பதற்காக, கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல், மிக மிக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்னும் ஒரு சம்பவமாக இது மாறியுள்ளது.
1930 ஆம் ஆண்டு நீராவி இன்ஜின் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பழங்கால ரயிலுக்கு எம்ப்ரஸ் 2816 என்று பெயர். தற்போது மீண்டும் இந்த ரயில் மெக்சிகோவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேரரசி ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்காரியிலிருந்து புறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ரயில் கனடா மற்றும் அமெரிக்க வழியாக மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியை சென்றடையும். அங்கிருந்து ஜூலை மாதம் கனடா திரும்புவதுடன் அதன் பயணம் நிறைவடையும்.
இதையடுத்து இந்த ரயிலைக் காண ஆங்காங்கே மக்கள் கூடி செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். அந்த வகையில், பேரரசி ரயிலை காண பலரும் ஹிடால்கோ என்ற இடத்தில் கூடியிருந்தனர். அந்த இடத்தில் ரயில் கிராஸ் செய்தபோது பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது இளம் பெண் ஒருவர் தன் மகனுடன் வந்து செல்பி எடுக்க முயன்றார். ரயில் பாதைக்கு வெகு அருகே போய் முட்டி போட்டு செல்பி எடுக்க முயன்றார். அப்போது ரயிலின் பக்கவாட்டுப் பகுதி பலமாக அவரது பின்னந்தலையில் மோதியது.
மோதிய வேகத்தில் அந்தப் பெண் சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்ன கொடுமை என்றால் இப்பெண் ரயிலில் அடிபட்டு கீழே விழுந்தும் கூட பலர் விடாமல் ரயிலை புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் என்பதுதான்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}