பாரீஸ்: மைக்கேல் ஜாக்சனின் மூன்வாக்கை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தப் பாடலுக்காக அவர் பயன்படுத்திய அந்தத் தொப்பி ரூ. 68.38 லட்சம் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் மிக முக்கியமான அடையாளமே அந்த மூன்வாக் டான்ஸ்தான். அதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது, சொக்கிப் போய் விழாதவர்களே இருக்க முடியாது இந்த நடத்தின்போது அவர் பயன்படுத்திய தொப்பியை பாரீஸில் ஏலம் விட்டனர். அது இந்திய மதிப்பில் ரூ. 68.38 லட்சம் தொகைக்கு ஏலம் போனது.
பாரீஸில் உள்ள ஹோட்டல் டரவுட் ஏல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த தொப்பி ஏலம் விடப்பட்டது. மொத்தம் 200 பொருட்கள் ஏலம் விடப்பட்டது. அதில் ஜாக்சனின் தொப்பிதான் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொருளாகும். இருப்பினும் அதிக தொகைக்கு இது ஏலம் போகவில்லை. பிரபலமான இசைக் கலைஞர் ப்ளூஸ்மேன் டி போன் வாக்கர் பயன்படுத்திய கிதார்தான் அதிக தொகைக்கு ஏலம் போனது.
மைக்கேல் ஜாக்சனின் இந்த மூன்வாக் ஜாக்சன் ரசிகர்களின் வெறித்தனமான விருப்ப நடனமாகும். இந்தப் பாடல் முழுவதிலுமே ஜாக்சன் வெறித்தனமாக கவர்ந்திழுப்பார். அந்தத் தொப்பியை எடுக்கும் விதம், தலையில் வைக்கும் வேகம், தூக்கி எறியும் ஸ்டைல்.. மறுபடியும் எடுத்து தலையில் வைத்து விட்டு அவர் ஆட ஆரம்பிக்கும்போதே அத்தனை பேருக்கும் அப்படி ஜிவ்வென்ற பீல் வரும்.
மூன்வாக் வெறியர்களின் மனம் கவர்ந்த இந்த தொப்பியைத்தான் இப்போது ஏலம் விட்டுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}