இஸ்லாமாபாத்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறது. 25 வருடங்களாக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட், தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயல்பாடுகளை சுருக்கி வந்த நிலையில், தற்போது முழுவதுமாக வெளியேறுகிறது.
2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் தனது சேவையை தொடங்கியது. தற்போது பாகிஸ்தானில் சூழல் சரியில்லாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் நிறுவனத் தலைவர் ஜவ்வாத் ரெஹ்மான் LinkedIn சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை தெரிவித்தார்.
இதுவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. Tech Radar என்ற இணையதளத்தின் செய்தியின்படி, பாகிஸ்தானில் முழு செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, ஐந்து ஊழியர்களுடன் ஒரு தொடர்பு அலுவலகம் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் தனது சேவையை நிறுத்துவது அந்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 25 வருடங்களாக அந்நாட்டில் செயல்பட்டு வந்த ஒரு பெரிய நிறுவனம் வெளியேறுவது வருத்தமளிக்கிறது. ஜவ்வாத் ரெஹ்மான் தனது LinkedIn பதிவில் கூறுகையில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தான். மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொள்கிறது என்பதை இன்று நான் அறிந்தேன். கடைசியாக இருந்த சில ஊழியர்களுக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டது. சரியாக 25 வருடங்களுக்கு முன்பு, ஜூன் 2000-ல், மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானை தொடங்கி வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இது ஒரு நிறுவனத்தின் வெளியேற்றம் மட்டுமல்ல. நம் நாடு உருவாக்கியுள்ள சூழலின் ஒரு எச்சரிக்கை அறிகுறி. மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் கூட இங்கு நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் விட்டுச் சென்ற வலுவான அடித்தளத்தை வைத்து அடுத்த குழுவினரும், பிராந்திய நிர்வாகமும் சரியாக செயல்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது என்றார் அவர்.
மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து வெளியேறுவது என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}