மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி

Jun 29, 2026,12:26 PM IST

- ஞா.சொர்ணதீபம்


மருந்தாய் மலர்ந்த முத்துக்கள்

கருமை முத்தாய் குலுங்கும் நீ,

காயம் குணமாக்கும் கருணை நீ!


வாய்ப்புண் வலியை வேரறுக்கும்,

வாழ்வின் நலத்தை வாரி வழங்கும்.


வயிற்றின் வேதனை தணிக்கும் தோழன்,

வலிமை தரும் இயற்கையின் பொக்கிஷம்.


கல்லீரல் காக்கும் காவலனாய்,

களைப்பை விரட்டும் கற்பகமாய்.




கசப்பில் மறைந்த இனிய மருந்தே,

கண்கள் கவரும் கருநிற விருந்தே!


உண்டோர் உடலில் உற்சாகம் பூக்கும்,

உயிரில் ஆரோக்கியம் என்றும் தழைக்கும்.


மனிதா !


"மருந்தைத் தேடி தூரம் செல்லாதே;

இயற்கை தரும் வரத்தை மதித்து உண்ணு;

ஆரோக்கிய வாழ்வை அன்புடன் அணைத்து வாழு!"


(ஞா.சொர்ணதீபம், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெடியரசம்பாளையம், பள்ளிபாளையம், ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?

news

தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்